பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய தொகுப்பு மின்சாரம் குறைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : நெல்லையில் உள்ள கூடங்குளம் உள்ளிட்ட மின் நிலையங்களில், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, குறைவான மின்சாரமே வழங்கப்படுகிறது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில், மத்திய அரசுக்கு, அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 6,186 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சராசரியாக, 4,500 மெகா வாட் தான் வழங்கப்படுகிறது. கோடைக் காலத்தில், 5,000 மெகா வாட்டிற்கு மேல் வழங்கப்படும்.தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மத்திய தொகுப்பு மின்சாரம், முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், மத்திய மின் நிலையங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு, உடனே பணமும் தர தேவையில்லை.

இந்நிலையில், நெல்லையில் உள்ள கூடங்குளம் மற்றும் கர்நாடகா மாநிலம், கைகாவில் உள்ள அணுமின் நிலையங்கள்; திருவள்ளூரில் உள்ள வல்லுார் அனல் மின் நிலையங்களில் பழுது, பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய தொகுப்பில் இருந்து தற்போது, தமிழகத்திற்கு, 3,000 மெகா வாட்டிற்கும் குறைவாகவே மின்சாரம் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X