பொது செய்தி

தமிழ்நாடு

கிளை கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் கிளை கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் கவலையடைந்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு, பொருவளூர், பொரசப்பட்டு, மேல்சிறுவளூர் உள்ளிட்ட கிராமங்கில் உள்ள கிளை கால்வாய்களை அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழைநீர் அப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளத்திற்கு செல்ல வழியின்றி சாலையில் சென்று வீணாகி வருகிறது.கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் 2 மாதங்களில் பெய்து வரும் மழை நீர் நிலைகளுக்கு செல்லாததால், விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர்.நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டதால் மழைநீர் வீணாகி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை.வரும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X