தனிமை  முகாமில் 60 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை  முகாமில் 60 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூலை 24, 2020
Share

சங்கராபுரம்; சங்கராபுரம் தனிமை முகாமில் தங்கியிருந்த 60 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.சங்கராபுரம் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெங்களூரு, கேரளா, மும்பை பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா தொற்றால் வேலையின்றி தவித்த இவர்கள், ரயில் மற்றும் பஸ் மூலம் சங்கராபுரம் வந்தவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள தனிமை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று பரிசோதிக்கப்பட்டது.தொற்று இல்லாத நபர்கள் தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டு குவாரண்டைன் முடிந்ததும் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி நேற்று 60 பேர் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு, தாசில்தார் நடராஜன், மண்டல அலுவலர் வாசுதேவன், டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X