எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'டிமிக்கி' கொடுக்கும் தொழிற்சங்கத்தினர்; அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மின் வாரியம், தொழிற்சங்கத்தினர், அதிகாரிகள், ஆய்வு, கோரிக்கை

சென்னை : தொழிற்சங்கத்தினர் உட்பட, அனைவரும் ஒழுங்காக வேலைக்கு வருவதை உறுதி செய்ய, தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை, பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்யுமாறு, மின் வாரிய தலைவருக்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மின் வாரியத்திற்கு, 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, ஒரு உதவி பொறியாளரின் கீழ், 'போர்மேன், ஒயர்மேன்' உள்ளிட்ட ஊழியர்களுடன் செயல்படுகின்றன. மின் வினியோகம் தொடர்பான அனைத்து பணிகளும், பிரிவு அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில், மின் கட்டண மையங்களும் உள்ளன.

மழைக் காலம் துவங்க உள்ளதால், சேதமடைந்த சாதனங்களை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலர், வேலைக்கு சரியாக வருவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: பிரிவு அலுவலகங்களில், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மின் சாதனங்கள் பராமரிப்பு, புதிய மின் இணைப்பு வழங்குவது என, அனைத்து பணிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு, பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, பஸ் போக்குவரத்து இல்லாததால், அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களில், பொறுப்புகளில் உள்ள ஊழியர்கள், வேலைக்கு தினமும் வருவதில்லை. அவர்கள், வேலைக்கு வந்தது போல, வருகை பதிவு செய்கின்றனர். அவர்கள் மீது, பொறியாளர்கள் நடவடிக்கையும் எடுப்பதில்லை.இதனால், வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே, மேலும் வேலைகளை வழங்குவதால், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.

எனவே, அனைத்து ஊழியர்களும் சரியாக வேலைக்கு வருவதை உறுதி செய்ய, தலைமை அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை, பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பி, திடீர் ஆய்வு செய்ய, மின் வாரிய தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
25-ஜூலை-202012:40:18 IST Report Abuse
A P ”வேலை செய்யாமல் கூலி கேள்” என்று தொழிற்சங்கத்தினருக்கு சொல்லிக்கொடுத்ததே கம்யூனிஸ்ட் கழிசடைகள்தான். அந்தக் கட்சியினரை ........த்தால் எல்லாம் சரியாகிவிடும். நியாயமாக நடவடிக்கைகள் எடுக்கிற மத்திய அரசிடமிருந்து, இருக்கு கூடிய விரைவில் ஆப்பு.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
25-ஜூலை-202010:46:15 IST Report Abuse
Chandramoulli தமிழகத்தில் மூன்று துறையில் உண்டி குலுக்கி , தி மு க கட்சியின் தொழில் சங்கங்கள் உள்ளன. மின்சாரம், போக்குவரத்து, அரசு கல்விப்பணியாளர்கள். தேர்தலில் உருப்படாத கட்சிகளுக்கு கும்மி அடிப்பதையே முக்கிய வேலையாக வைத்து கொள்வதற்கு தொழில் சங்கம் போர்வையில் இவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். 1996 - 2001 வரை இவர்கள் ஆக்கிரமிப்பு மிக அதிகம். போராட்டம் செய்வது ஒன்றே இவர்கள் கொல்ஹாய். வேலை பார்க்கும் எண்ணமே இல்லை. தமிழகத்தின் தலை விதி .
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
25-ஜூலை-202010:41:32 IST Report Abuse
Rajan இதுபோன்று பிரச்சினைகளை ஊழியர்கள் (நம்முள் இருப்பவர்களால் தான்) உருவாக்கப்படுகிறது. பின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும். அதனை சரிசெய்ய தனியார்மயம் ஆக்கினால் அணைத்து அரசியல் கட்சிகளும் கதறுவார்கள். இப்பிரச்சினை இப்போது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக உள்ளது அனால் சம்பந்தப்பட்ட எந்த கட்சியும் "ஒழுங்காக வேலை செய்யுங்கள், செய்து தனியார்மயம் ஆவதை நிறுத்துங்கள்" என அறிவுரை செய்யாது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண மின்வாரியத்தில் சேவை சார்ந்த துறைகளை தனியாரிடம் அவுட்சோர்ஸ் (குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு) செய்தால் நிலைமை சரியாகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X