பொது செய்தி

தமிழ்நாடு

சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: ஏ.டி.எஸ்.பி.,

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தியாகதுருகம்; 'துாய்மையை கடைபிடித்தாலே கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியும்' என ஏ.டி.எஸ்.பி., பேசினார்.தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நேற்று போலீஸ் துறை சார்பில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆட்டோ டிரைவர்கள், கடை உரிமையாளர்கள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:கொரோனா தொற்றை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக போலீஸ் துறையினர் மக்களைப் பாதுகாக்க தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். இதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. அவசியம் இன்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கையுறை அணிந்து கொள்வது மிகுந்த பாதுகாப்பானதாகும்.துாய்மை குறித்து நமது முன்னோர்கள் பல நல்ல வழிகளை கற்றுக் கொடுத்துள்ளனர். அதனைக் கடைபிடித்தாலே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.காய்ச்சல், சளி, அறிகுறி உள்ளவர்கள் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அதன் முடிவுகள் தெரியும் வரை தனிமைப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு நோய் பரவாமல் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., சங்கர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X