வள்ளலார் மன்றத்தில்ஆடி மாத பூச விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் மன்றத்தில்ஆடி மாத பூச விழா

Added : ஜூலை 24, 2020
Share
சங்கராபுரம்; சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற செயலர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், நெல் அரிசி ஆலை சங்கத் தலைவர் வேலு முன்னிலை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.மன்ற பூசகர் சிவஞான அடிகள், கார்த்தி முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதி மற்றும் கொரோனா

சங்கராபுரம்; சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற செயலர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், நெல் அரிசி ஆலை சங்கத் தலைவர் வேலு முன்னிலை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.மன்ற பூசகர் சிவஞான அடிகள், கார்த்தி முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதி மற்றும் கொரோனா தாக்கம் குறைய பிரார்த்தனை செய்யப்பட்டது. ராமாயி ராமநாதன் அறக்கட்டளை சார்பில் மன்ற உபயோகத்திற்காக பாத்திரங்களை கல்யாணி முத்துக்கருப்பன் வழங்கினார்.விழாவில் முன்னாள் ரோட்டரி தலைவர்கள் முர்த்தி, வெங்கடேசன், ஆசிரியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டு, மன்ற நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X