இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலர் ஏழுமலை, பொருளாளர் மார்த்தாண்டன், துணைச் செயலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் உத்தரகோட்டி, துணைத் தலைவர்கள் வெங்கடேசன், தங்கமணி உட்பட பலர்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயலர் ஏழுமலை, பொருளாளர் மார்த்தாண்டன், துணைச் செயலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் உத்தரகோட்டி, துணைத் தலைவர்கள் வெங்கடேசன், தங்கமணி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலை இழந்துள்ளதால், மேலும் 6 மாதத்திற்கு ரேஷன் கடை மூலம் அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.ரேஷன் கடையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X