ஏற்கனவே எச்சரித்தேன் | Dinamalar

ஏற்கனவே எச்சரித்தேன்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
 ஏற்கனவே எச்சரித்தேன்

'கொரோனா' பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து, மத்திய அரசை ஏற்கனவே எச்சரித்தேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இப்போது மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். சீன விவகாரத்திலும், அரசை எச்சரித்தேன். அதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
- ராகுல் , எம்.பி., -- காங்.,
இந்தியாவுக்கு பின்னடைவு
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க, அமெரிக்கா - சீனா இடையிலான மோதல் போக்கு அதிகரிக்கும். கொரோனா தொற்றின் கடுமையான பாதிப்பில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப முயலும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு, இது மிகப் பெரிய பின்னடைவாக அமையும்.
- ரகுராம் ராஜன் , முன்னாள் கவர்னர் , ரிசர்வ் வங்கி
சமரசம் கிடையாது
காங்கிரசை சேர்ந்த, சில இளம் தலைவர்கள், தங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். மத்தியில், காங்கிரஸ் கட்சி, இப்போதைக்கு ஆட்சி அதிகாரத்திற்கு வராது என்ற அவர்களின் நினைப்பே, இதற்கு காரணம். தனிப்பட்டவர்களுக்காக, சித்தாந்தத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது.
- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , லோக்சபா தலைவர், காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X