பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பணி பதவிக்காலம் நீட்டிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களில், தேர்தல் பணிக்காக உருவாக்கப்பட்ட, 281 பணியிடங்களின் பதவி காலத்தை, டிசம்பர், 31 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக, 903 தேர்தல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஊரக உள்ளாட்சி தேர்தல், 311 ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஜன., 6ம் தேதி பதவியேற்றனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், எல்லை வரையறை பணி நிறைவு பெறாததால், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்தல் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படாமல் உள்ளது. தேர்தலுக்கான பணியிடங்களில், தேர்தல் முடிந்த பகுதிகளில், 311 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 311 கம்ப்யூட்டர் உதவியாளர் பணியிடங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன.தேர்தல் நடக்காத பகுதிகளில், 281 பணியிடங்களில் பதவி காலத்தை நீட்டிக்கும்படி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.அதை ஏற்று, 281 தேர்தல் பணியிடங்களின் பதவி காலத்தை, டிச., 31 வரை நீட்டித்தும், அந்த பணியிடங்களுக்கு, 70.62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X