உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

Added : ஜூலை 24, 2020
Share

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பெருமாள், ஆண்டாள் சிறப்பு வைபவம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 8:00 மணிக்கு ஆண்டாள் சமேத தேகளீச பெருமாள், பெரியாழ்வாருக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமுறை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவர் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.ஆடி வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்ததால் மூலவர் புஷ்பவல்லி தாயார், பூங்கோவல் நாச்சியாருக்கு விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், பக்தர்கள் இன்றி பட்டாச்சாரியார்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.உளுந்துார்பேட்டைமூலசமுத்திரம் கிராமத்தில் உள்ள செல்வ வெக்காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பால்குட அபிஷேகம் நடந்தது. ஊரடங்கால் பால்குடம் ஊர்வலம் இன்றி எளிய முறையில் பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் குருக்கள் தாயுமானவன் பூஜைகளை நடத்தினார்.சங்கராபுரம்ஆடி வெள்ளியை முன்னிட்டு, சங்கராபுரம், முதல் பாலமேடு புத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில், அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X