பொது செய்தி

தமிழ்நாடு

டீ விற்கும் ஐகோர்ட் வக்கீல்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
டீ, ஐகோர்ட், வக்கீல்

ஈரோடு: உயர் நீதிமன்ற வக்கீல், வாழ்வாதாரத்துக்காக, ஈரோட்டில், டீ விற்பனை செய்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீலாக இருந்தவர், செய்யது ஹாரூண், 69; தற்போது, ஈரோடு, சம்பத் நகரில், சைக்கிளில் டீ விற்பனை செய்து வருகிறார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில், 41 ஆண்டுகளாக, வக்கீலாக வழக்காடி வருகிறேன். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையாக, நீதிமன்றங்கள் முழு அளவில் செயல்படவில்லை. இதனால், சொந்த ஊரான ஈரோடுக்கு வந்து விட்டேன். எனக்கு வேறு வேலை தெரியாது. வருமானம், வாழ்வாதாரத்துக்கு வழியில்லை. இதனால், டீ விற்பனை செய்கிறேன்.

நீதிமன்றத்தை விரைவில் திறந்து, முழு அளவிலான செயல்பாட்டை துவங்க வேண்டும். வக்கீல்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் கொரோனா ஊரடங்கால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மட்டுமின்றி, சென்னை உட்பட பல இடங்களில், வக்கீல் வேலையை மட்டும் தொழிலாக வைத்திருக்கும் பலரும் சிரமப்படுகின்றனர். இது போன்றவர்களுக்கு உதவ, அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
27-ஜூலை-202012:25:15 IST Report Abuse
Indhuindian நாப்பது ஒரு வருஷம் ஹை கோர்ட்டில் தொஷில் செய்தவர் இப்போது தேநீர் விற்கிறார். என்னடாது வக்கீலுக்கு வந்த சோதனை. இதை தான் எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார்ன்னு சொல்றாங்களா
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202007:57:55 IST Report Abuse
Pats வக்கீல் தொழிலைத்தவிர வேறு தொழில் தெரியாது என்று சொல்லிவிட்டு இப்பொழுது டீ விற்கும் தொழில் செய்கிறார் யுவர் ஹானர். நேற்றுவரை உயர்நீதிமன்றத்தில் இவர் டீ தான் விற்றுக்கொண்டிருந்ததாரா? இதுவரை கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதித்த பணத்திற்கு கணக்கு எங்கே?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-202005:32:21 IST Report Abuse
Mani . V விடுங்க பாஸ், வருங்காலத்தில் இந்தியாவில் உயர்ந்த பதவிக்கு வர வாய்ப்புண்டு. அதற்க்கு இப்பொழுதே வாயால் வடை சுட கொஞ்சம் பயிற்சி எடுத்தால் நல்லது.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
27-ஜூலை-202009:46:21 IST Report Abuse
Jayveeathukku nermaiya irukkanum.. thesa virodhiya irukka koodathu.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X