தமிழ்நாடு

மெத்தனம்: நிவாரணத் தொகை வழங்குவதில்...மாற்றுத் திறனாளிகள் அலைகழிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் நிவாரணம் 1000 ரூபாயை வீடுகளுக்குச் சென்று வழங்காமல் அலைகழிக்கப்படுவதாக மாற்றுத் திறனாளிகள் புலம்பி வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், ஊரடங்கும் ஒரு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.சில நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் விவசாயிகளின் நிலையை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் செலுத்தியது. அதேபோல் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் நிலையை உணர்ந்து மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகையாக 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இது கடந்த மாதம் 29ம் தேதி முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான தொகையை அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்குமாறும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் கார்டு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நிவாரணத் தொகையை அவர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், பல கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று அரசின் நிவாரண தொகையை வழங்காமல், நகர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றுத் திறனாளிகளை வந்து வாங்கிச் செல்லுமாறு கூறுகின்றனர்.

பல கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகம் மாடியில் இருப்பதால் நடக்க முடியாத மற்றும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் மாடி பகுதிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோன்று, மாற்றுத் திறனாளிகளை பல கிராம நிர்வாக அலுவலர்கள் அலைகழித்து வருகின்றனர்.இது குறித்து தாசில்தாரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாற்றுத் திறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.எனவே மாற்றுத்திறனாளிகளின் நிலையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X