பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றி இரண்டு ஆண்டுகள்கிடப்பில் உள்ள கான்கிரீட் வாய்க்கால் பணி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் சுதாகர் நகரில் நீர் வழிப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், கால்வாய் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சுதாகர் நகரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்கால், படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டது.இந்த வாய்க்கால், இருந்த இடம் தெரியாமல் நாளடைவில் ஆக்கிரமிப்புகளால் மாயமானது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து, கோர்ட் உத்தரவின்பேரில், கடந்த 2018ம் ஆண்டு இங்கிருந்த இரு கடைகள், ஒரு கட்டடத்தின் படிகள், ஒரு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், சாலையோரம் பள்ளம் தோண்டிய இடத்தில் அளவீடு செய்து, கான்கிரீட் வாய்க்கால் அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.இதேபோல், இந்த சாலையின் வலதுபுறம் ஒரு கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, அதன் பின்புறம் நீர் வரத்து வாய்க்கால் செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் துாரத்திற்கு மட்டும், வாய்க்கால் பள்ளம் தோண்டினர். அதன் பிறகு, பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இங்கு கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியை துவங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X