பொது செய்தி

தமிழ்நாடு

கடன்கள் வழங்குவதற்கானதிட்ட அறிக்கை வெளியீடு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வங்கியாளர்களுக்கான 2020-21ஆம் ஆண்டிற்கான வங்கிகள் மூலம் கடன்கள் வழங்குவதற்கான திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி திட்ட அறிக்கையை வெளியிட்டார்.நபார்டு வங்கியின் திட்டத்தின் வாயிலாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த ஆண்டிற்கான பொதுமக்கள் கடன் வசதி சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து இதில் ரூ.8770.61 கோடி கடனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5415.34 கோடி கடன் உதவி மேற்கொள்ள நபார்டு வங்கியின் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கமர்சியல் வங்கி மூலமாக ரூ.4449.84 கோடியும், கோ -ஆப்ரேடிவ் வங்கி மூலமாக ரூ.563 கோடியும், ஆர்.ஆர்.பி வங்கியின் மூலம் ரூ.402.50 கோடியும் என மொத்தமாக ரூ.5415.34 கோடி கடன் வழங்கிட நடப்பு ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X