சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்ட கல்லுாரி மாணவர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

விழுப்புரம்; மாவட்ட நீதிமன்றங்களை உரிய பாதுகாப்புடன் திறக்க வலியுறுத்தி, சட்டக் கல்லுாரி மாணவர்கள் விழுப்புரத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழகத்தில், மாவட்ட நீதி மன்றங்களை உரிய பாதுகாப்பு வசதிகளுடன், மீண்டும் திறந்து செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, சட்டக் கல்லுாரி மாணவர்கள் சங்கம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் சபரிராஜன், பொருளாளர் நவீன்குமார், மாணவரணி தலைவர் அஜித்குமார் மற்றும் எழிலரசன், தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-ஜூலை-202014:28:19 IST Report Abuse
Jayvee மொதல்ல மனுஷனா மாறுங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X