பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்குதற்காலிக மதிப்பெண் பட்டியல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி துவங்கியது.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 37 ஆயிரத்து 245 மாணவ, மாணவிகள், பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில், 32 ஆயிரத்து 397 பேர் (86.98 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள 155 பள்ளிகளைச் சேர்ந்த 16 ஆயிரத்து 732 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 14 ஆயிரத்து 625 பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி, நேற்று துவங்கியது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணியை, சி.இ.ஓ., முனுசாமி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, உதவி தலைமை ஆசிரியை மாலா ராணி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X