தனியார் பஸ்கள் இயக்கம் உரிமையாளர்கள் தயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ்கள் இயக்கம் உரிமையாளர்கள் தயக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
சென்னை : தமிழகத்தில், தனியார் பஸ்களின் இயக்கம் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, பயணியர் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல், பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனியார்வாகனங்களை இயக்குவதில் நடைமுறை சிக்கல்கள்

சென்னை : தமிழகத்தில், தனியார் பஸ்களின் இயக்கம் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, பயணியர் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல், பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனியார்வாகனங்களை இயக்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர், தர்மராஜ் கூறியதாவது:தமிழகத்தில், 60 சதவீத பயணியருடன், பஸ்களை இயக்கும்படி, தமிழக அரசு அறிவுறுத்தியது. பின், அனைத்து பஸ்களையும் நிறுத்தும்படி உத்தரவிட்டது. அடுத்த வாரம், இந்த தடை முடிவுக்கு வருகிறது.ஊரடங்குக்குப் பின், லிட்டர் டீசல் விலை, 15 ரூபாய் உயர்ந்துள்ளது.

சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. பஸ்கள் இயங்காத நிலையிலும், வரி கேட்டு, அரசு நிர்பந்திக்கிறது. காப்பீட்டை நீட்டிக்கும்படி கோரியும், எந்த பதிலையும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், ஒடிசா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளவரை, பயணியர் கட்டணத்தை, ௫௦ சதவீதம் உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, 60 சதவீத பயணியருடன், மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்கினால், நஷ்டம் அதிகரிக்கும். எனவே இப்போதைக்கு, தனியார் பஸ்களை இயக்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X