பொது செய்தி

தமிழ்நாடு

பவ்டா சுய உதவி குழுவினருக்கு அமைச்சர் நிவாரணம் வழங்கல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் பவ்டா சார்பில் கொரோனா கால நிவாரண பொருட்களை, அமைச்சர் சண்முகம் வழங்கினார். விழுப்புரம் மாவட்ட பவ்டா குழுமம் சார்பில், பவ்டா சுய உதவி குழு உறுப்பினர்கள் 1522 பேர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. திண்டிவனத்திலுள்ள ஸ்ரீராம் திருமண நிலையத்தில் நடந்த விழாவில்,பவ்டா குழும நிறுவனர் ஜாஸ்லின்தம்பி வரவேற்றார்.சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி, ஏழை பெண்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, சக்கரபாணி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜசேகர், நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், டவுன் டி.எஸ்.பி., கனகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், திருப்பதியார்சங்கர், செந்தில், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X