பொது செய்தி

இந்தியா

'சுதந்திர தின விழாவில் கூட்டம் கூட வேண்டாம்'

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Independence Day, celebration, coronavirus, சுதந்திர தின விழா

புதுடில்லி : 'சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்' என, மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகளை, மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

நாட்டின், 74வது சுதந்திர தினம், ஆக., 15ல் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும், கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், சுதந்திர தின விழா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:



* ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைப்பிடித்து, விழாவை கொண்டாட வேண்டியுள்ளது

* டில்லி செங்கோட்டையில், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வில், ராணுவம் மற்றும் டில்லி காவல் துறையின் அணிவகுப்பு நடைபெறும். 21 குண்டுகள் முழங்க, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பிரதமர் உரையாற்றுவார். அதன்பின், தேசிய கீதம் இசைக்கப்படும்

* காலை, 8:00 மணிக்கு, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில், முதல்வர் கொடி ஏற்றல், காவல் துறையினர், ஊரக காவலர்கள், என்.சி.சி,, சாரணர் உள்ளிட்டோருக்கு விருது வழங்கல், முதல்வர் உரை, தேசிய கீதம் இசைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

* கொரோனா பரவலால், மாநிலங்கள், மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துகள் என விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும், அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்

* விழா நடக்கும் இடம், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். விழாவில் பங்கேற்பவர்களும், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

* கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரை, விழாவுக்கு அழைத்து கவுரவிக்கலாம். அதேபோன்று, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலரையும் அழைக்கலாம்

* தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுதந்திர தினத்தை கொண்டாடலாம்; சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், இணையத்தில் நேரலை செய்யப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
26-ஜூலை-202006:04:49 IST Report Abuse
samvijayv வரவேற்க வேண்டிய ஓர்., நல்ல முடிவு.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-ஜூலை-202016:22:32 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாடு அமெரிக்க சுதந்திர தினமாக இருந்தாலும் சரி வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு, சுதந்திர தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடுவதாகத் தெரியவில்லை..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாடு ஜனவரி 26 குடியரசு தினமும் வைரஸ், வைரஸ் நோய் பரவல் இருந்துகொண்டிருந்தால் எதுமாதிரி விமர்சையாகக் கொண்டாடுவார்கள் என்று தெரியவில்லை..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாடு பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மூடியிருக்கின்றது, CBSE, CBSC பள்ளிக்கூடங்கள், சில கல்லூரிகள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொல்லியிருக்கிறார்கள்..R.Kumaresan.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-ஜூலை-202009:37:26 IST Report Abuse
ஆரூர் ரங் ஆகஸ்ட் 15குடியரசு தினத்திற்கு இப்போதே சுடலை வாழ்த்து தெரிவிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X