பொது செய்தி

இந்தியா

12.88 லட்சம் பேர் பாதிப்பு பலி 30,601 ஆக உயர்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், நேற்று வரை, 12.88 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், பலியானோர் எண்ணிக்கை, 30 ஆயிரத்து, 601 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை:நேற்று மட்டும், 49 ஆயிரத்து, 310 பேரிடம், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 லட்சத்து, 87 ஆயிரத்து, 945 ஆக உயர்ந்துள்ளது.மஹா.,வில், 3.48 லட்சம் பேரும்; தமிழகத்தில், 1.93 லட்சம் பேரும்; டில்லியில், 1.27 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று வரை, 8.17 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதை யடுத்து, பாதிப்பில் இருந்து மீண்டோர் விகிதம், 63.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட, 4.40 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, மஹா.,வில், 298; கர்நாடகாவில், 97; தமிழகத்தில், 88; ஆந்திராவில், 61; மே.,வங்கத்தில், 34; குஜராத்தில், 28 பேர் உள்ளிட்ட, 740 பேர் இறந்துள்ளனர். இதனால், வைரஸ் தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை, 30 ஆயிரத்து, 601 ஆக உயர்ந்துள்ளது. இறப்பிலும், 12 ஆயிரத்து, 854 பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. டில்லியில், 3,745; தமிழகத்தில், 3,232; குஜராத்தில், 2,252; கர்நாடகாவில், 1,616; உ.பி.,யில், 1,289; மே.,வங்கத்தில், 1,255 பேர், வைரசால் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X