பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்த மருத்துவ மாணவர் தாய்க்கு இழப்பீடு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : பஸ் மோதி உயிரிழந்த மருத்துவ மாணவரின் தாய்க்கு, 41.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரீத்தம், 20; எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்தார். சென்னை -- பெங்களூரு நெடுஞ்சாலையில், 2017 அக்டோபரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டியார்பேட்டை அருகே சென்ற போது, அதிவேகமாக வந்த பஸ், எந்த சிக்னலும் கொடுக்காமல்,அங்கே இருந்த பஸ் நிறுத்தத்தில் நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத, பிரீத்தம் பஸ் மீது மோதினார். பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் மகனின் இறப்பிற்கு இழப்பீடு கோரி, அவரது தாய் மனோன்மணி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை,நீதிபதி எஸ்.உமா மகேஸ்வரி முன் நடந்தது. 'விசாரணையில், மனுதாரரின் மகன் இறப்பிற்கு, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் பஸ்சை இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 41.80 லட்சம் ரூபாயை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X