அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஓடுமாம்: அமைச்சர் பகீர்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 அப்பளம் சாப்பிட்டால் கொரோனா ஓடுமாம்: அமைச்சர் பகீர்

புதுடில்லி : 'எங்கும் பரவி வரும் கொரோனா வைரசை தடுத்து விரட்டும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய அனைத்து பொருள்களும் இந்த அப்பளத்தில் இருக்கிறது' என கூறி, அதை விளம்பரப்படுத்தும், மத்திய இணை அமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால் வெளியிட்டுள்ள, 'வீடியோ'விற்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.

மத்திய நீர்வளம் மற்றும் பார்லிமென்ட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அப்பளம் ஒன்றை விளம்பரப்படுத்தி வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோவில் தோன்றும் அமைச்சர், 'என் அன்புக்குரிய மக்களே, தற்சார்பு பாரதம் திட்டத்தின் கீழ், அப்பள உற்பத்தியாளர் ஒருவர், 'பாபிஜி' என்ற அப்பளத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். 'இதில், கொரோனா வைரசை விரட்டியடிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அனைத்து பொருள்களும் உள்ளன.

'இந்த அப்பளம், கொரோனா வைரசுக்கு எதிரான நம் போராட்டத்திற்கு உதவியாக இருக்கும்' என, கூறுகிறார்.இந்த வீடியோவிற்கு, பல்வேறு தரப்பினரும், கண்டனத்தையும், கிண்டலையும் பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், 'அமெரிக்கா, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறது; பிரிட்டன், தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.'இந்தியாவோ அப்பளத்தை உருவாக்கி, கொரோனாவை விரட்டப் பார்க்கிறது' என, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், 'வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, வீட்டில் உட்கார்ந்து கொண்டு அப்பளம் சாப்பிட்டாலே போதும் என்கிற போது, தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க, ஏன் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட வேண்டும்' என, கேட்டு உள்ளார்.'பாபா ராம்தேவ் போல அமைச்சர்களும், கொரோனாவுக்கு எதிராக, போலி மருந்துகள் மூலம் லாபம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர்' என, சமூக ஆர்வலரான வழக்கறிஞர்பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூலை-202011:09:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஒருவேளை இந்தமந்திரியின் மனைவி ஒருவேளை அப்பளம் பிசினெஸ் செய்றாங்களோ அதான் சிபாரிசு செய்றாங்க சுட்டப்பழம் ஓகே ஆயில் வச்சுப்பொறிச்சா நோ யூஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X