சென்னை -- கூடூர் இடையே மின் தொடர்பு வசதிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை -- கூடூர் இடையே மின் தொடர்பு வசதிகள்

Added : ஜூலை 24, 2020
Share

சென்னை : -சென்னை -- கூடூர் இடையேயான ரயில் பாதையில், 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, 1.47 கோடி ரூபாய் செலவில், மின் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இது குறித்து, ரயில்வே சிக்னல் மற்றும் மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுதும், முக்கிய பாதைகளில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, பாதைகள், சிக்னல்கள், மின் தொடர்புகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் -- ஆந்திரா மாநிலம் கூடூர் இடையே, 137 கி.மீ., பாதையில், ரயில்கள், 80 - 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.இப்பாதையில், 130 கி.மீ., வேகம் வரை, ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பாதை மற்றும் சிக்னல் அமைப்புகள், பாலங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இப்பாதையில், ஆள் இல்லா ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு, தேவைக்கு ஏற்ப, சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரயில் வேகத்தை அதிகரிக்க, இப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது.இதில், 130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படும் போது, வேக அழுத்தத்தை மின் சாதனங்கள் தாங்கும் வகையிலும், உரிய மின் தொடர்பு தடங்களின்றி வழங்கப்படவும், 1.47 கோடி ரூபாய் செலவில், மின் பாதை தரம் உயர்த்தப்படுகிறது. இப்பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X