பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி வாக்குமூலம் பதிவு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
லக்னோ : பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின்
LK Advani , Babri Case Hearing, Babri Case, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி, வாக்குமூலம்

லக்னோ : பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி, 'இந்த வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 'அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு, வேண்டுமென்றே என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளது' என, வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து, பா.ஜ., வின் மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி, 92, நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி, தன் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அத்வானியின் வழக்கறிஞர்கள் விமல் குமார் ஸ்ரீவத்சவா, கே.கே.மிஸ்ரா, அபிஷேக் ரஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சி.பி.ஐ., தரப்பில், வழக்கறிஞர்கள் லலித் சிங், பி.சக்கரவர்த்தி, ஆர்.கே.யாதவ் ஆகியோர் ஆஜராகினர். சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், இந்த வழக்கை விசாரித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-ஜூலை-202023:07:37 IST Report Abuse
Vena Suna 92 வயது தலைவரை இப்படியா கொடுமைப்படுத்துவது? பாவம்..நல்ல மனிதர்...பிரதமரே ஆகி இருக்க வேண்டும்..
Rate this:
Cancel
selva kumar - port blair,இந்தியா
25-ஜூலை-202011:09:11 IST Report Abuse
selva kumar ஏற்கனவே கோவில் இருந்த இடத்தில் இருந்த ஒரு கட்டடத்தை இடித்தார்கள் என்பதுதான் வழக்கு அந்த இடத்தில் இருந்தது கோவில்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யவேண்டும் என்பது எனது கருத்து
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-ஜூலை-202009:06:20 IST Report Abuse
ஆரூர் ரங் இந்துக்களின் கோவில்தான் என்பதை கோர்ட் உறுதிப்படுத்திவிட்டது. இந்துக்களின் சொந்த கோவிலில் ஆண்டுகளுக்கொரு முறை திருப்பணி செய்து மறுக்கட்டுமானம் கும்பாபிஷேகம் செய்வது இந்து நம்பிக்கையின் முக்கிய அம்சம். எனவே இது செல்லாத வழக்கு கரசேவகர்களுக்கு வீர வணக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X