பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற 'எம் - சாண்ட்' விற்பனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : தரமற்ற 'எம் - சாண்ட்' விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பொதுப்பணித் துறை மவுனம் காப்பது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணலுக்கு மாற்றாக, கல் குவாரிகளில் பெறப்படும், எம் - சாண்ட் எனப்படும், கல் மணல் பயன்படுத்த, அரசு அனுமதி வழங்கியுள்ளது. குவாரிகளில், தரமான உறுதியான கற்களை, சரியான இயந்திரங்கள் வாயிலாக நொறுக்கி, இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, எம் - சாண்ட் தயாரிக்க வேண்டும். தமிழகத்தில், 110க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, எம் - சாண்ட் தயாரிக்க, அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்குவதற்காக, பொதுப்பணித் துறை, ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை, கட்டட அமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு துறைகளின் தலைமை பொறியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தரமான எம் - சாண்ட் தயாரிப்பதை கண்காணிப்பதற்காக, பொதுப்பணித் துறையில், தனிப்பிரிவு துவங்கப்பட்டு உள்ளது. இதற்கென தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அரசிடம் அனுமதி பெற்ற நிறுவனங்கள், எம் - சாண்ட் விற்பனை செய்யும் போது, பொதுப்பணித் துறை சான்றிதழ் மற்றும் பகுப்பாய்வு அறிக்கை அவசியம். ஆனால், இதை நிறுவனங்கள் கண்டுகொள்வது கிடையாது. ஊரடங்கு தளர்விற்கு பின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கட்டுமான பணிகள் வேகம் எடுத்துள்ளன. அரசு ஒப்பந்த பணிகளும் இதில் அடக்கம். அரசு உத்தரவின்படி பலரும், எம் - சாண்ட் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இதனால், உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட, எம் - சாண்ட் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால், அரசு கட்டுமான பணிகளுக்கும், இதுபோன்ற தரமற்ற, எம் - சாண்ட் பயன்படுத்தப் படுவதாக புகார் எழுந்து உள்ளது. இதனால், கட்டடத்தின் தரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. சிறுக சிறுக சேர்த்து, வீடு கட்டும் பலரும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தரமான எம் - சாண்ட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொதுப்பணித் துறையினர் அமைதி காத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X