பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்; முகையூர் வட்டார வேளாண் துறை சார்பில் தரிசு நிலத்தை மேம்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கான ஆலோசனை நடந்தது.முகையூர் வட்டார வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனை முகாம் நடந்தது. முகையூர் ஊராட்சியில் 55 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.இதனை திருத்தி விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன்படி நேற்று வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமையில் ஆலோசனை முகாம் நடந்தது.இத்திட்டதில் முகையூரில் உள்ள தரிசு நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி 2 முறை உழவு செய்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தார். இதற்காக அரசு சார்பில் மானியத்துடன் கூடிய உதவிகளையும் எடுத்துக் கூறினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகலிங்கம்,வேளாண் அலுவலர் செல்வமணி, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கட கிருஷ்ணன், செல்வி, கோசிகாமணி, பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் இத்திட்டதில் பங்கு பெற விண்ணப்பித்துள்ள 25 விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X