பொது செய்தி

இந்தியா

ஆன்லைனில் ஆடுகள் விற்பனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மும்பை : உலகம் முழுதும், 'பக்ரீத்' பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமின்றி, பசியால் வாடும் ஏழைகளுக்கும் உணவளிப்பது வழக்கம். இதை, இறைவனுக்கு படைக்கும் விருந்தாக, அவர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்து, வரும் பக்ரீத் பண்டிகைக்காக, மஹாராஷ்டிராவில், மும்பையின் புறநகர் பகுதியான ஜோகேஷ்வரியில், ஆடுகள் விற்பனை, 'ஆன்லைன்' மூலம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, ஆடுகளின் மொத்த விற்பனையாளர் வாசிம் கான் கூறியதாவது: கொரோனா காரணமாக, ஆடுகள் வாங்க மக்கள் கூடுவதை தவிர்க்க, ஆன்லைன் மூலம் விற்பனை நடைபெறுகிறது. ஆடுகளின் புகைப்படங்கள், ஆன்லைனில் உள்ளன.

பொதுமக்கள், தங்களுக்கு பிடித்த ஆடுகளை தேர்வு செய்தால், அவற்றை, அவர்களின் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X