தமிழ்நாடு

தாமதம்: சத்துணவு பொருட்களை பள்ளிக்கு அனுப்புவதில்... ஏமாற்றத்துடன் திரும்பும் மதிய உணவு மாணவர்கள்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி என இரு தாலுகாவை சேர்ந்த அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான சத்துணவு பொருட்கள் பள்ளிக்கு அனுப்புவது தாமதமாவதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பசியோடு கல்வியை கற்க கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு, காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் சாம்பார் சாதம், முட்டை, சுண்டல் என திட்டத்தை விரிவுபடுத்தி செயல்பட்டு வந்தனர்.தமிழக முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் சாப்பாட்டிற்கு சிரமப்படுவார்கள் என்பதால் அரசு, மாணவர்களு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றை பொருட்களாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி பல மாவட்டங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவை பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுபாட்டில் உள்ள விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தாலுகா பகுதியில் 133 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1 முதல் 5ம் வகுப்புகள் வரையுள்ள 6 ஆயிரத்து 882 மாணவர்களும், 6 முதல் 8 ம் வகுப்புகள் வரை 4 ஆயிரத்து 931 மாணவர்களும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.இரு தாலுகாக பள்ளிகளுக்கும் விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சத்துணவு திட்ட பிரிவு மூலம், மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்குவதற்காக தேவைப்படும் 37 ஆயிரம் கிலோ அரிசி, 19 ஆயிரம் கிலோ பருப்பு உள்ளிட்டவையின் தேவை குறித்து அறிக்கை தயார் செய்து, அதிகாரிகள் ஒப்புதலோடு, நுகர்பொருள் வாணிபகழக குடோனிற்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த பொருட்களை லாரிகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் குடோனில் உள்ள இருப்புகளை கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறைந்தளவு மாணவர்களுக்கே சத்துணவுக்கான பொருட்களை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் 1 முதல் 5ம் வகுப்புகள் வரை 3 ஆயிரத்து 100 கிராம் அரிசியும், 1,200 கிராம் பருப்பும், 6 முதல் 8 ம் வகுப்புகள் வரையுள்ள மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 650 கிராம் அரிசியும், 1250 கிராம் பருப்பும் வழங்கப்படுகிறது.இதில் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தாலுகாவிற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 133 பள்ளிகளுக்கு, இருப்பில் உள்ள அரிசி மற்றும் பருப்பு வழங்குவதால், மாணவ, மாணவிகள் பலர் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சத்துணவு மாணவர்களுக்கான பொருட்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் தேவைக்கான அரிசி, பருப்புகள் குறித்து பட்டியல் அனுப்பியிருந்தாலும், லாரிகள் வேலைநிறுத்தம், வாகனங்களுக்கான 'ட்ரீப் ஷீட்' பிரச்னைகளால் பொருட்கள் வந்து சேர காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, எங்களிடம் இருப்பு உள்ள பொருட்களை கொண்டு, மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க பொருட்கள் சமமாக பகிர்ந்து கொடுத்து வருகிறோம்.முழுமையாக பொருட்கள் வந்தால் மட்டுமே, இந்த பிரச்னைகள் தீரும். மேலும், அரசு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சத்துணவு பொருட்கள் இல்லை என தெரிவித்த போதிலும், அவர்களும் பொருட்களுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் புரிந்து கொண்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை தடையின்றி வழங்க வழிவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X