பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் 

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

செஞ்சி;அப்பம்பட்டில் அரசுத்துறைகள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. செஞ்சி தாலுகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதை தடுப்பதற்காக அரசுத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அப்பம்பட்டு கிராமத்தில் அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், அறவாழி ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். துணை.பி.டி.ஓ., குமார், வி.ஏ.ஓ.,க்கள் பன்னீர் செல்வம், சிலம்பரசன், ஊராட்சி செயலாளர் அன்பழகன், சுகாதாரத்துறையினர், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோர் மாஸ்க் அணிந்து வெளியே செல்வவேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்கவேண்டும், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொது மக்களுக்கு அதிகாரிகள் வலியுறத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X