சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கதை கேட்பதால் மன நிலையில் மாற்றம்!

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

'கதைகள் சொல்வதன் மூலம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் ஏற்படுகிறது; பெரியவர்களுக்கு கவலைகள் மறக்கின்றன' என்கிறார், 'பெங்களூரு ஸ்டோரி கிளப்'பின் அமைப்பாளர்களில் ஒருவரான, சவும்யா சீனிவாசன்:

நான், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். விலங்கியலில் பட்டப் படிப்பு படித்த நான், எம்.ஏ., சைக்காலஜி முடித்தேன். சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி, வித்யாசாகரில் இரண்டாண்டுகள் பணியாற்றியுள்ளேன்.என் கணவர் சீனிவாசன், விமானப் படையில் அதிகாரியாக இருக்கிறார். அதனால், நாட்டின் பல ஊர்களிலும் இருந்துள்ளோம். சிறு வயதிலேயே எனக்கு, கதை சொல்வதில் ஆர்வம் அதிகம். எங்கள் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில், நானே ஆர்வமாக சென்று, கதை சொல்லத் துவங்கினேன்.தொழில் முறை கதை சொல்லியாக மாற, அந்த திறமைகள் எனக்கு உதவின.

குழந்தைகளுக்கு நல்ல, பிடித்தமான கதைகளை சொல்வதற்காக, ஏராளமான நம் நாட்டு, வெளிநாட்டு கதைகளை படிக்கிறேன்.அவற்றை நன்றாக உள்வாங்கி, குழந்தைகள் விரும்பும் வகையில் சொல்கிறேன்.துவக்கத்தில் பள்ளிகளாக ஏறி, இறங்கி, வாய்ப்பு கேட்டு, குழந்தைகளுக்கு கதை சொன்னேன். இப்போது, எங்களின் ஸ்டோரி கிளப் பற்றி, அனைவரும் நன்கு தெரிந்துள்ளதால், வேலை எளிதாகிறது.

எனினும், குழந்தைகளுக்கு புரியும் மாதிரி கதை சொல்வது எளிதல்ல. சிறு வயதிலேயே எனக்கு, பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் தெரியும் என்பதால், குழந்தைகளை ஈர்க்கும் வகையில், கை, கால்களை அசைத்து, பாடல்கள் பாடி, 'மிமிக்ரி' செய்து, கதைகளை சொல்கிறேன்.குரலை மாற்றி பாடுவேன்; பறவைகள், விலங்குகள் போல கத்துவேன் என்பதால், என் வகுப்பில் பங்கேற்க, குழந்தைகள், மிகவும் ஆர்வமாக இருப்பர்.

குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களின் மன காயங்களுக்கும், கதைகள் மூலம் நான் மருந்திடுகிறேன். அறிந்தோ, அறியாமலோ வாழ்க்கையில் அவர்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள, என் கதைகள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன. கதை கேட்பவர் யார் என்பதை பொறுத்து, கதைகளில் ஏற்ற, இறக்கங்கள், வித்தியாசமான அறிவுரைகள், அணுகுமுறைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.பெரியவர்கள், கதாபாத்திரங்களை விட கதையை தான் முக்கியமாக விரும்புவர். அவர்களுக்காக, பல விதங்களில் முயற்சிக்கிறேன்.

என்னுடன் சில ஆசிரியர்களை சேர்த்து கொண்டு, வித்தியாசமான முறையில், கதை சொல்கிறேன். குழந்தைகளுக்கான கதைகளில் புராண கதைகள் மட்டுமின்றி, சமூக விழிப்புணர்வு, வாழ்க்கை கல்வி, சுற்றுச்சூழல் போன்ற பிரச்னைகளையும் சொல்லிக் கொடுக்கிறேன். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் நிறைய கதை சொல்ல வேண்டும். சொல்லும் கதைகள், குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டும் விதத்தில் இருக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளரும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
25-ஜூலை-202007:49:35 IST Report Abuse
thamodaran chinnasamy சரியான உண்மை . மேலும் இதனால் குழந்தைகளுக்கு பெரியவர்களிடம் அன்பும் பாசமும் கூடும் . சீறார்களுக்கு பெரியவர்களின் மேல் அறிவுசார்ந்த அன்பும் மரியாதையும் கூடும் . வாழ்வோம் வளமுடன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X