மருந்து தெளிப்பு வாகனம்; முதல்வர் இ.பி.எஸ்., துவக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருந்து தெளிப்பு வாகனம்; முதல்வர் இ.பி.எஸ்., துவக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
 மருந்து தெளிப்பு வாகனம்; முதல்வர் இ.பி.எஸ்., துவக்கம்

சென்னை : -பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் வி.எஸ்.எல்., தொழில் நிறுவனம் சார்பில், 13.07 லட்சம் ரூபாயில், கொரோனா தடுப்பு பணிக்காக, பேட்டரியில் இயங்கும் மூன்று மருந்து தெளிப்பான் வாகனங்களும், ஒரு நடமாடும் உணவு வாகனமும் வாங்கப்பட்டுள்ளன.இவற்றை முதல்வர் நேற்று துவக்கி வைத்தார். இவ்வாகனங்களில், இரண்டு மருந்து தெளிப்பான் வாகனங்கள், இடைப்பாடி தொகுதியிலும், ஒரு மருந்து தெளிப்பான் வாகனம், சேலம் மாநகராட்சியிலும் பயன்படுத்தப்படும். நடமாடும் உணவு வாகனம், சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் ராஜ்சத்யன், வி.எஸ்.எல்., தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிகிருஷ்ணா உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X