ரயில்வே அலுவலகம்: வாரியம் கிடுக்கிப்பிடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே அலுவலகம்: வாரியம் கிடுக்கிப்பிடி

Added : ஜூலை 24, 2020
Share

சென்னை : நிர்வாக செலவுகளை குறைக்க, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாடு முழுதும் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் ரயில்வே அலுவலகங்களை, சொந்த இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே உட்பட, அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதம்:ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும், இடவசதி உள்ளது. பல மண்டலங்களில் ரயில்வே அலுவலகங்கள், தனியார் இடங்களில் இயங்கி வருகின்றன.இந்த அலுவலகங்களை, ரயில்வேக்கு சொந்தமான இடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை, மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டும்.

அலுவலகங்களை இடம் மாற்றுவதால், நிர்வாக சிரமம் ஏற்படும் என்றால், கட்டட வாடகை, அலுவலக விபரங்களை தெரிவிக்க வேண்டும்.அனைத்து விபரங்களையும், ஒரு வாரத்துக்குள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X