கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ரூ.94 கோடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு ரூ.94 கோடி

Added : ஜூலை 24, 2020
Share
சென்னை : தேனியில், கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டும் பணிக்காக, 94 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறைக்கு, அரசு வழங்கியுள்ளது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய, நான்கு இடங்களில், அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டம், தலைவாசலில்

சென்னை : தேனியில், கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டும் பணிக்காக, 94 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறைக்கு, அரசு வழங்கியுள்ளது.

தமிழக கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய, நான்கு இடங்களில், அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டம், தலைவாசலில் கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கான பணி நடந்து வருகிறது. இதேபோன்று, தேனி மாவட்டத்திலும் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார்.அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான பணி, தற்போது துவங்கியுள்ளது.இந்த மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை, 265 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக, தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில், 228 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஐந்து ஆண்டுகள் படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக, 94.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X