பொது செய்தி

தமிழ்நாடு

15 லட்சம் விவசாயிகளுக்கு கடன் அட்டை பெற முயற்சி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : வங்கிகளில், 15 லட்சம் விவசாயிகளுக்கு, 'கிஸான் கடன் அட்டை' பெற்று தருவதற்கான பேச்சை, வேளாண் துறையினர் துவக்கியுள்ளனர்.

தமிழகத்தில், 80 லட்சம் விவசாயிகள் வேளாண் துறையில் பதிவு செய்துள்ளனர். சாகுபடி செலவுக்கு பணமில்லாமல், பல விவசாயிகள் திண்டாடுகின்றனர். இதனால், சாகுபடி இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு ஏற்பாட்டில், விவசாயிகளுக்கு, கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. ரூ.3 லட்சம்இந்த கடன் அட்டையை பயன்படுத்தி, 1.60 லட்சம் ரூபாயை, வங்கிகளில் உடனடியாக கடனாக பெற முடியும்.விவசாயத்துடன் மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட பணிகளையும் சேர்த்து செய்ய, 3 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.

தமிழகத்தில், பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் உள்ள, 20.5 லட்சம் பேருக்கு, கிஸான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 15 லட்சம் பேருக்கு, கடன் அட்டைகள் பெற்று தருவதற்கான பணிகளை, வேளாண் துறையினர் மேற்கொண்டுள்ளனர். பிரதமரின் உதவித்தொகை பெறும் வங்கிகளில், விவசாயிகளுக்கு இதற்கான விண்ணப்பங்கள், பிப்ரவரியில் வழங்கப்பட்டன. தயக்கம்ஆனால், 2.41 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே, கடன் அட்டைகளை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.

அதுவும் விவசாயிகள் கைகளுக்கு, இன்னும் வந்து சேரவில்லை.எனவே, 15 லட்சம் விவசாயிகளுக்கும், கடன் அட்டைகள் பெற்று தருவ தற்கான முயற்சியில், வேளாண் துறையினர் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன், வேளாண் துறை இயக்குனர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர்தட்சிணாமூர்த்தி ஆகியோர், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். கடன் அட்டைகள் வழங்கினால், விவசாயிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க வேண்டி இருக்கும் என்பதால், அதை வழங்க வங்கிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

பிரதமரின் விவசாய உதவிஆறாம் கட்ட நிதி ஒதுக்கீடுபிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு ஆறாம் கட்டமாக, 517 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கும் பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்ட நிதி, மூன்று தவணைகளாக, தலா, 2,000 ரூபாய் வீதம், விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், 42.31 லட்சம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு, உதவித்தொகை வழங்குவதற்கு ஐந்து கட்டமாக, 3,414 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது, ஆறாம் கட்டமாக, 517 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, 25.8 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், வரவு வைக்கும் பணி துவங்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X