பொது செய்தி

இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குவது எப்போது? கொரோனாவால் குறட்டை விடும் திட்டம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
நம் நாட்டில், வரும், 2021ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, மூன்று கட்டங்களாக நடைபெற இருந்தது. கடந்த ஏப்ரலில், முதல் கட்டப் பணி துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்., - செப்., வரை, வீடுகளின் கணக்கெடுப்பும், 2021ம் ஆண்டு, பிப்ரவரியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற இருந்தன. எப்போது துவங்கும்?இறுதியாக, அடுத்த ஆண்டு மார்ச்சில், சேகரிக்கப்பட்ட
மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குவது எப்போது? கொரோனாவால் குறட்டை விடும் திட்டம்

நம் நாட்டில், வரும், 2021ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, மூன்று கட்டங்களாக நடைபெற இருந்தது. கடந்த ஏப்ரலில், முதல் கட்டப் பணி துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்., - செப்., வரை, வீடுகளின் கணக்கெடுப்பும், 2021ம் ஆண்டு, பிப்ரவரியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற இருந்தன.


எப்போது துவங்கும்?

இறுதியாக, அடுத்த ஆண்டு மார்ச்சில், சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்கும் பணி துவங்க இருந்தது.திடீரென கிளம்பிய கொரோனா பிரச்னையால், அனைத்து பணிகளும் துவக்கப்படாமலே நின்று விட்டன. மார்ச், 25ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி வைக்கப்படுவதாக, இந்திய ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் அறிவித்தார்.

இந்திய வரலாற்றில், முதன் முறையாக, தற்போது தான், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால், 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில், இறுதியாக 2011ல் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது, 121 கோடியே, 8 லட்சத்து, 54 ஆயிரத்து, 977 பேர் இருந்தனர். இது தற்போது, 130 கோடியை தாண்டியிருக்கும்.இந்திய ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் மேற்பார்வையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு களப் பணியாளருக்கும், 650 - 800 பேரிடம் விபரங்களை சேகரிக்கும் பணி வழங்கப்படும்.


தகவல் சேகரிப்பு:

பெரும்பாலும், அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் தான், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வர். 2021ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு, 30 லட்சம் களப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு, மத்திய அரசு, நடப்பு 2020 -- 21ம் நிதியாண்டில், 4,568 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த முறை, மக்கள் தொகை ஆய்வுக்கு, மொபைல்போன் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், விரைவாக தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து, தொகுப்புகளை உருவாக்க முடியும்.

வழக்கமான முறையில் மக்கள் தொகை விபரங்களை சேகரிப்போருக்கு, தலா, 17 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்படும். இந்த முறை, மொபைல்போனில், 'ஆப்' மூலம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வோருக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், வீட்டு எண், வீட்டு உரிமையாளர், பாலினம், வயது, திருமணம், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகிய விபரங்கள் கோரப்படும்.

அத்துடன், குடிநீர், மின்சாரம், சமையலறை, கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், களப் பணியாளர்கள் பதிவு செய்வர். சமையலுக்கு எரிவாயு பயன்படுத்தப்படுகிறதா என்பதையும், வீட்டில் வானொலி, 'கேபிள் டிவி' மற்றும் டி.டி.எச்., இணைப்பு, இணைய வசதி ஆகியவற்றின் விபரங்களையும், களப் பணியாளர்கள் சேகரிப்பர்.


சலுகைகள்:

வீட்டில் உள்ளோரின் வங்கிக் கணக்கு விபரங்கள், வைத்திருக்கும் வாகனங்கள், உணவுக்கு பயன்படுத்தும் உணவு தானியங்கள், மொபைல் போன் எண் ஆகிய விபரங்களும் பெறப்படும்.இத்தகைய தகவல்கள், அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் அறிவிக்கப்படும் நிதியுதவி, சலுகைகள் ஆகியவை, பயனாளிகளை நேரடியாக சென்றடைய உதவும் என, அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எப்போது துவங்கும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. கணக்கெடுப்பு துவங்க, மேலும் சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-ஜூலை-202016:53:43 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் வெளியிட்டதாகத் தெரியவில்லை மற்றும் சில மாநிலங்களில் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
25-ஜூலை-202016:38:22 IST Report Abuse
Chakkaravarthi Sk There is also a possibility of lessening of numbers due to corona deaths. It is good for delayed census. I would recomm the census to include corona deaths in a transparent manner. Even if the collection is delayed, if we obtain the complete statistics we can find more data pointing to dead people, co-morbitities, extent of Diabetes, Blood pressure patients etc., This can be used to plan and implement more aggressive and strategic testing facilities in areas where specific illnesses prevail. For example the three TB sanatoria in Tamilnadu were located in such manner.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X