பொது செய்தி

இந்தியா

மூன்றாம் நபர் தலையிட வேண்டாம்: பிரிட்டனுக்கு சீன துாதர் எச்சரிக்கை

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 மூன்றாம் நபர் தலையிட வேண்டாம்: பிரிட்டனுக்கு சீன துாதர் எச்சரிக்கை

புதுடில்லி : ''இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பாக பிரிட்டன் துாதரக அதிகாரி கருத்து தெரிவித்தது, துரதிருஷ்டவசமானது; இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, சீன துாதர் சன் வெய்டங் கூறினார்.

டில்லியில் உள்ள பிரிட்டன் துாதர் பிலிப் பர்டன், சமீபத்தில் கூறி இருந்ததாவது: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது, இந்தியாவுடன் எல்லை விவகாரத்தில் மோதலில் ஈடுபடுவது, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது போன்ற விஷயங்களில் சீனாவின் செயல்பாடுகள், சர்வதேச சமுதாயத்துக்கு கவலை அளிக்கின்றன.இவ்வாறு, அவர் கூறி இருந்தார்.

இது குறித்து, சீன துாதரக அதிகாரி சன் வெய்டாங் கூறியதாவது:இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையேயான எல்லை பிரச்னை, இரு நாடுகள் சம்பந்தப்பட்டது. இதை நாங்களே பேசித் தீர்ப்போம். மூன்றாவது நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. தவறான தகவல்களின் அடிப்படையில் பேட்டி அளிப்பதை, பிரிட்டன் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். தென் சீன கடல் பகுதியில் நிலவும் பதற்றத்துக்கு காரணம், அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் இல்லை. வெளியில் இருந்து வந்துள்ள சில சக்திகளால் தான், பதற்றம் நிலவுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூலை-202012:57:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்த சப்பைமூக்கனுக இஷ்டத்துக்கு எங்குமே நுழையலாமா என்னடா அநியாயாயிருக்கே
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
27-ஜூலை-202009:55:35 IST Report Abuse
Hari இப்போ என்ன சீனா செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என எல்லோரும் ஒத்துக்கொள்ளணுமா,இங்குள்ள கம்யூனிஸ்டுகளும் அப்படிதான் செயல்பட்டுக்கொண்டு பேசித்திரிகிறார்கள் ,இவர்களை மொத்தமாக சீனாவிற்குள் அள்ளிக்கொண்டு போனால் இவர்கள் மூலமாக தென்சீனக்கடலின் உங்கள் உரிமையை திடமாக பெற்றுவிடுவார்கள் அழைத்துச்செல்லுங்கள்.எங்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் நாங்களும் நல்ல வளரமுடியும் நன்றி
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202004:25:31 IST Report Abuse
J.V. Iyer இதைத்தான் திமிர் என்பது. வலுவிற்கு சண்டைக்கு வந்து, தான் ஏதோ உத்தமன் போல பேசுவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X