மூன்றாம் நபர் தலையிட வேண்டாம்: பிரிட்டனுக்கு சீன துாதர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூன்றாம் நபர் தலையிட வேண்டாம்: பிரிட்டனுக்கு சீன துாதர் எச்சரிக்கை

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி : ''இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பாக பிரிட்டன் துாதரக அதிகாரி கருத்து தெரிவித்தது, துரதிருஷ்டவசமானது; இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, சீன துாதர் சன் வெய்டங் கூறினார். டில்லியில் உள்ள பிரிட்டன் துாதர் பிலிப் பர்டன், சமீபத்தில் கூறி இருந்ததாவது: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது, இந்தியாவுடன்
 மூன்றாம் நபர் தலையிட வேண்டாம்: பிரிட்டனுக்கு சீன துாதர் எச்சரிக்கை

புதுடில்லி : ''இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பாக பிரிட்டன் துாதரக அதிகாரி கருத்து தெரிவித்தது, துரதிருஷ்டவசமானது; இந்த விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை,'' என, சீன துாதர் சன் வெய்டங் கூறினார்.

டில்லியில் உள்ள பிரிட்டன் துாதர் பிலிப் பர்டன், சமீபத்தில் கூறி இருந்ததாவது: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது, இந்தியாவுடன் எல்லை விவகாரத்தில் மோதலில் ஈடுபடுவது, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது போன்ற விஷயங்களில் சீனாவின் செயல்பாடுகள், சர்வதேச சமுதாயத்துக்கு கவலை அளிக்கின்றன.இவ்வாறு, அவர் கூறி இருந்தார்.

இது குறித்து, சீன துாதரக அதிகாரி சன் வெய்டாங் கூறியதாவது:இந்தியாவுக்கும், எங்களுக்கும் இடையேயான எல்லை பிரச்னை, இரு நாடுகள் சம்பந்தப்பட்டது. இதை நாங்களே பேசித் தீர்ப்போம். மூன்றாவது நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. தவறான தகவல்களின் அடிப்படையில் பேட்டி அளிப்பதை, பிரிட்டன் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். தென் சீன கடல் பகுதியில் நிலவும் பதற்றத்துக்கு காரணம், அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகள் இல்லை. வெளியில் இருந்து வந்துள்ள சில சக்திகளால் தான், பதற்றம் நிலவுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X