சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணையில் விவசாயி மரணம் வன பாதுகாவலருக்கு நோட்டீஸ்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : வனத் துறை விசாரணையில், விவசாயி இறந்தது குறித்து, தலைமை வன பாதுகாவலர் பதிலளிக்க, மனித உரிமைகள் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள, ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து, 72; விவசாயி. இவர், வீட்டின் அருகே உள்ள வயலில், முன்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.வனத் துறையினர் ஐந்து பேர், முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதை அறிந்த தும், அவரது மகன் நடராஜன் உறவினர்கள், வனத் துறை அலுவலகத்திற்கு சென்றனர்.சிவசைலம் ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது, எதிரே வனத் துறை அலுவலர்கள் ஜீப்பில், அணைக்கரை முத்துவை அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் உறவினர்கள் விசாரித்த போது, உடல்நிலை சரியில்லை என கூறி உள்ளனர்.

மருத்துவமனைக்கு சென்ற போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து, வனத் துறையினர் ஐந்து பேர் மீது, கடையம் போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தலைமை வன பாதுகாவலருக்கு, நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், 'வனத் துறை விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி, திடீரென உயிரிழந்தது தொடர்பாக, அரசின் தலைமை வன பாதுகாவலர், நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X