அடிக்கல் நாட்டு விழாவிற்கு எதிராக மனு அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அலகாபாத் : அயோத்தியில் நடத்தப்படவிருக்கும் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில், அறக்கட்டளை ஒன்றை அமைத்தது. அதன்படி, கோவில் கட்டுமான பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில், பூமி பூஜைக்கு எதிராக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் சாகேத் கோக்கலே என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் அதிக அளவில் கூடக்கூடாது என, மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜை விழாவில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது, அரசு வரையறுத்துள்ள நெறிமுறைகளை மீறும் செயல்.ஆகையால், அடிக்கல் நாட்டு விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பொதுநல மனுவை விசாரிக்க, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இது குறித்து, உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த அடிக்கல் நாட்டு விழா, நெறிமுறைகளை மீறி நடைபெறும் என, அனுமானங்கள் அடிப்படையில், கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எங்களால் தலையிட முடியாது. ஆகையால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.அடிக்கல் நாட்டு விழாவில், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதை, விழா ஏற்பாட்டாளர்களும், உ.பி., அரசும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., தலைமையக மண்!அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜைக்காக, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் சேகரிக்கப்பட்ட மண், 'கூரியர்' மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனுடன், ராம்தேக் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணும், ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X