பொது செய்தி

இந்தியா

56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
By Election, EC, Election Commission, இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம், ஆலோசனை

புதுடில்லி : நாட்டில், காலியாக உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும், 56 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பீஹார் மாநிலம், வால்மீகி நகர் லோக்சபா தொகுதி; தமிழகத்தில், திருவொற்றியூர், குடியாத்தம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும், செப்., 7ம் தேதிக்குள், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.கொரோனாவால், நாட்டில் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பருவமழை காரணமாக, சில மாநிலங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதிகளில், செப்., 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த முடியாது என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷேபள்ளி சரண், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் நேற்று கூறியிருப்பதாவது: நாட்டில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் 56 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள், காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியும், அதற்கான அட்டவணையும், சரியான நேரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
25-ஜூலை-202010:34:19 IST Report Abuse
Chandramoulli 15 - 20 % வாக்கு பதிவுக்கு அதிக வாய்ப்பு. காசு வாங்கியவர்கள் தான் அல்லது கள்ள ஒட்டு போடுபவர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டு ஒரு பயனும் இல்லை. 2020 - 2021 தேர்தலை 2022 டிசம்பர் வரை தள்ளி வைப்பதே சிறந்தது. சட்ட திருத்தும் கொண்டு வரலாம் . இதனால் பயன் அடைவது எடப்பாடி அவர்கள் . சுடலை மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-ஜூலை-202009:36:07 IST Report Abuse
ஆரூர் ரங் கொரோனாவுக்குத் தீர்வு கண்டுபிடித்து சரிசெய்யும் வரை தேர்தல்களால் ஆபத்துதான் எனவே இன்னும் இரண்டாண்டுகளுக்கு தேர்தலை மறந்துவிடலாம்.. அரசு ஊழியர்களே தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என எதிர்ப்பு தெரிவிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X