56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் ஆலோசனை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி : நாட்டில், காலியாக உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும், 56 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.பீஹார் மாநிலம், வால்மீகி நகர் லோக்சபா தொகுதி; தமிழகத்தில், திருவொற்றியூர், குடியாத்தம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும், செப்., 7ம் தேதிக்குள், இடைத்தேர்தல் நடத்தப்பட
By Election, EC, Election Commission, இடைத்தேர்தல், தேர்தல் ஆணையம், ஆலோசனை

புதுடில்லி : நாட்டில், காலியாக உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும், 56 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பீஹார் மாநிலம், வால்மீகி நகர் லோக்சபா தொகுதி; தமிழகத்தில், திருவொற்றியூர், குடியாத்தம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும், செப்., 7ம் தேதிக்குள், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.கொரோனாவால், நாட்டில் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பருவமழை காரணமாக, சில மாநிலங்களில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதிகளில், செப்., 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த முடியாது என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷேபள்ளி சரண், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் நேற்று கூறியிருப்பதாவது: நாட்டில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் 56 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தேர்தல் ஆணைய அதிகாரிகள், காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியும், அதற்கான அட்டவணையும், சரியான நேரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X