அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 தொகுதி தேர்தல் நடக்குமா?

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : சென்னை, திருவொற்றியூர் தொகுதி தி.மு.க.,- - எம்.எல்.ஏ., --- கே.பி.சாமி, பிப்., 27ம் தேதியும், குடியாத்தம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., காத்தவராயன், பிப்., 28ம் தேதியும், உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர்.

சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க., -- எம்.எல்.ஏ., அன்பழகன், கொரோனா காரணமாக, ஜூன், 10ல் இறந்தார். இதன் காரணமாக, மூன்று சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.ஒரு சட்டசபை தொகுதி காலியானால், அதற்கு ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருவொற்றியூர் தொகுதிக்கு, ஆகஸ்ட், 26; குடியாத்தம் தொகுதிக்கு, ஆக., 27க்குள், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், செப்., 7 வரை, இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.

அந்த கூட்டத்திற்கு பின், நாடு முழுதும் காலியாக உள்ள, லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியானது. இதனால், எப்போது வேண்டுமானாலும், இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2021 மே மாதம் நிறைவடைய உள்ளது. பொதுத் தேர்தலுக்கு, ஓராண்டு கூட இல்லாத நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு குறைவு.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:தமிழகத்தில், ஆகஸ்ட் மாதத்திற்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிவித்தாலும், தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
25-ஜூலை-202008:22:36 IST Report Abuse
G.MUTHIAH இன்னும் 9 மாதங்கள் கழித்து தமிழக தேரதல் வருகின்றது என்பது அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் தெரியும். குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு இடை தேர்தல் நடத்தி மக்கள் வரி பணத்தை செலவு செய்து,மீண்டும் 2021ல் மே மாதம் அதே தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டுமா......?. அறிவுப்பூர்வமாக சிந்தியுங்கள்.....மக்கள் வரிப்பணம்......???.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X