2 லட்சத்தை நெருங்குது கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 6,785 பேருக்கு தொற்று உறுதி| Dinamalar

2 லட்சத்தை நெருங்குது கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 6,785 பேருக்கு தொற்று உறுதி

Added : ஜூலை 24, 2020 | |
சென்னை : கொரோனா தொற்று பரவலில் புதிய உச்சமாக, நேற்று, 6,785 பேருக்கு தொற்று உறுதியானது. மாநில முழுதும், 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலம் முழுதும், கொரோனா பரிசோதனைக்கு, 114 ஆய்வகங்கள் உள்ளன.அந்த ஆய்வகங்களில் நேற்று, 65 ஆயிரத்து, 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத வகையில், 6,785 பேருக்கு

சென்னை : கொரோனா தொற்று பரவலில் புதிய உச்சமாக, நேற்று, 6,785 பேருக்கு தொற்று உறுதியானது.

மாநில முழுதும், 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலம் முழுதும், கொரோனா பரிசோதனைக்கு, 114 ஆய்வகங்கள் உள்ளன.அந்த ஆய்வகங்களில் நேற்று, 65 ஆயிரத்து, 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத வகையில், 6,785 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும், 1,299; செங்கல்பட்டில், 419; கோவையில், 189; காஞ்சிபுரத்தில், 349; கன்னியாகுமரியில், 266; மதுரையில், 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.ராணிப்பேட்டையில், 222; தேனியில், 234; திருவள்ளூரில், 378; துாத்துக்குடியில், 313; திருச்சியில், 217; விருதுநகரில், 424 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதுவரை, 22.23 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரு லட்சத்து, 99 ஆயிரத்து, 749 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில், ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 389 பேர் ஆண்கள்; 78 ஆயிரத்து, 337 பேர் பெண்கள்; 23 பேர் மூன்றாம் பாலினத்தவர்.சென்னையில், 92 ஆயிரத்து, 206; செங்கல்பட்டில், 11 ஆயிரத்து, 308; காஞ்சிபுரத்தில், 6,361; மதுரையில், 9,302; திருவள்ளூரில், 11 ஆயிரத்து, எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலின் தாக்கம், 26 மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.மகிழ்ச்சி தரும் வகையில், நேற்று ஒரே நாளில் 6,504 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 297 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.தற்போது, 53 ஆயிரத்து, 132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 88 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அதில், அதிகபட்சமாக சென்னையில், 22 பேர்; மதுரையில், 10 பேர் இறந்துள்ளனர். இதுவரை, கொரோனா பாதிப்பால், 3,320 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 796 632 4செங்கல்பட்டு 11,308 8,224 218சென்னை 92,206 76,494 1,969கோவை 2,966 1,659 32கடலுார் 2,162 1,532 21தர்மபுரி 541 253 2திண்டுக்கல் 2,012 1,450 31ஈரோடு 564 416 8கள்ளக்குறிச்சி 2,833 2,003 16காஞ்சிபுரம் 6,361 3,891 84கன்னியாகுமரி 3,124 1,323 27கரூர் 328 189 9கிருஷ்ணகிரி 633 314 14மதுரை 9,302 6,448 193நாகை 523 301 2நாமக்கல் 459 223 4நீலகிரி 621 422 2பெரம்பலுார் 271 204 3புதுக்கோட்டை 1,394 773 18ராமநாதபுரம் 2,865 2,017 53ராணிப்பேட்டை 3,223 1,520 24சேலம் 2,732 1,938 21சிவகங்கை 1,906 982 32தென்காசி 1,506 450 9தஞ்சாவூர் 1,730 936 17தேனி 3,321 1,694 43திருப்பத்துார் 778 483 7திருவள்ளூர் 11,008 6,691 193திருவண்ணாமலை 4,781 2,890 44திருவாரூர் 1,156 711 1துாத்துக்குடி 4,971 2,590 27திருநெல்வேலி 3,387 1,909 19திருப்பூர் 617 325 7திருச்சி 3,089 1,763 51வேலுார் 4,646 3,352 40விழுப்புரம் 2,766 1,985 31விருதுநகர் 5,193 2,947 43வெளிநாட்டில் இருந்து வந்தோர் 769 543 1உள்நாட்டு விமான பயணியர் 477 408 0ரயிலில் பயணியர் 424 412 0மொத்தம் 1,99,749 1,43,297 3,320/***

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X