'ஜிம்'மில் தூள் கிளப்பும் குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 'ஜிம்'மில் தூள் கிளப்பும் குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா

ஆமதாபாத் : குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா, 80 வயதிலும், 'ஜிம்'மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

வகேலாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குஜராத்தில், 1996 - 97ல், முதல்வராக பதவி வகித்தவர் சங்கர் சிங் வகேலா, 80. பா.ஜ.,விலிருந்து பிரிந்து, ராஷ்ட்ரீய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை துவக்கி, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக இருந்தார். அதற்கு பின், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இணைந்து செயல்பட்டார். சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார்.இந்த மாத துவக்கத்தில், வகேலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சமீபத்தில், மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட அவர், வீடு திரும்பிய பின், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

இளம் வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வந்த வகேலா, மீண்டும் ஜிம்முக்கு சென்று, கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். பளு துாக்கும், நடைபயிற்சி செய்யும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.இதைப் பார்த்த பலரும், 'வகேலா, 80 வயதிலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது, வரவேற்கதக்க விஷயம் மட்டுமல்லாமல், பாராட்டத்தக்க விஷயமும் கூட' என, கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X