பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு: தலைமை செயலர் ஆலோசனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் சண்முகம், நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.

சென்னையில், கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது. ஆனால், மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில், போதிய படுக்கை வசதி இல்லை என, புகார் எழுந்துள்ளது.சென்னையை போல, நோய் அதிகரித்து வரும் மாவட்டங்களில், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நோய் பரவலை தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.இந்நிலையில், சென்னை தவிர்த்து, பிற மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் சண்முகம், நேற்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், நோய் தொற்றை குறைக்க, மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள்; நோய் தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், பொது ஊரடங்கு, வரும், 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா, தளர்த்தலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் கூறியதாவது:நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகளில், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்; அனைத்து பகுதிகளிலும், காய்ச்சல் முகாம் நடத்தி, நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்களை, நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.ஏனெனில், அவர்களால் மற்றவர்களுக்கு, நோய் பரவும் அபாயம் உள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய் தொற்று ஏற்பட்டவர்கள் வெளியில் செல்வதை தடுத்து, மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X