புதுடில்லி : இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த, ஆபத்து மிக்க உயிரி ஆயுதங்களை தயாரிக்க, பாகிஸ்தானுடன் சீனா ஒப்பந்தம் செய்து உள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், பல நாடுகளும், சீனா மீது கோபத்தில் உள்ளன.அத்துமீறி தாக்குதல்இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. கடந்த மாதம், லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக, சீனாவுக்கு எதிராக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவீடன் உட்பட, பல நாடுகள் போர்க்கொடி துாக்கி உள்ளன.
இந்நிலையில், இந்த நாடுகளின் எதிர்ப்புகளை சமாளிக்க, மிகவும் ஆபத்தான உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளது. இது பற்றி, புலனாய்வு பத்திரிகையாளர் அந்தோணி கிளான், 'கிளாக்சன்' இணையதளத்தில் எழுதியிருப்பதாவது: 'வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி' ஆய்வகம், 'டெஸ்டோ' எனப்படும், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன், ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.ஆராய்ச்சி இதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட, ஆபத்தான உயிரி ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான ஆராய்ச்சியில், இரு நாடுகளும் இறங்கியுள்ளன.
இதில், மிகவும் ஆபத்தான 'ஆந்தராக்ஸ்' தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களும் அடங்கும். இதற்காக, வூஹான் ஆய்வகம், பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கிஉள்ளது. பாகிஸ்தான், தன் சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுதளத்தை உருவாக்குவதற்காக, அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு, நோய்க்கிருமிகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும், வூஹான் ஆய்வகம் அளித்துஉள்ளது.'இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை துாண்டி விடுவதற்காக, இந்த திட்டத்தில் சீனா அதிக ஆர்வம் காட்டுகிறது' என, பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், தன் நிலத்துக்கும், மக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கவே, சீனா அபாயகரமான உயிரி ஆயுதங்கள் ஆராய்ச்சிக்காக பாகிஸ்தானை தேர்ந்தெடுத்துள்ளது. சீனா - -பாகிஸ்தான் உயிரி ஆயுத திட்டத்தில், சி.சி.எச்.எப்.வி., எனப்படும், ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ் குறித்த சோதனை நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE