பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி ரூபாய்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற, வீட்டிற்கான இழப்பீட்டு தொகை, 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அரசுக்கு நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, போயஸ் கார்டன் பகுதியில், மறைந்த முதல்வர் ஜெ., வசித்த, 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது.இந்த வீட்டின் மதிப்பு, 67.90 கோடி ரூபாய் என, தீர்மானிப்பட்டது. ஜெ., வாரிசுதாரர்களான, அவரது அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர், ஜெ., இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.வருமான வரித்துறை சார்பில், ஜெ., செலுத்த வேண்டிய வரி பாக்கி, 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

ஜெ., வாரிசுதாரர்களான தீபா, தீபக் ஆகியோர், இழப்பீட்டு தொகையை கோரவில்லை.எனவே, ஜெயலலிதா இல்லத்தை கையகப்படுத்த, இழப்பீட்டு தொகையான, 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
25-ஜூலை-202009:00:33 IST Report Abuse
veeramani அம்மா வாழ்ந்த வேத இல்லத்தை நினைவிடம் தாக்குதல் மிக நன்று. அம்மாவின் போட்டோக்களை , பயன்படுத்திய சாதனங்களை சேகரித்து பின்னர் தொகுத்து வைத்து நினைவிடம் மாற்றுதல் சிறந்தது. மற்றவர்களைப்பற்றி யோசிக்கவேண்டாம். மக்களின் ஆதரவு ஆளும் அரசிற்கு உண்டு.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
25-ஜூலை-202008:29:25 IST Report Abuse
நிலா அரசாங்க பணம் வீணாகிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
25-ஜூலை-202007:06:37 IST Report Abuse
natarajan s ஏற்கனவே 50 கோடியில் மெரினாவில் ஒரு நினைவு மண்டபம், அடுத்து 67 கோடியில் அவர் வாழ்ந்த வீடு நினைவு காட்சியகம், ஏன் இந்த வீண் செலவு. தமிழ்நாடு ஏன் இவளவு கீழ்த்தரமாக போய்க்கொண்டு இருக்கிறது , இதுதான் பகுத்தறிவு சுயமரியாதை . ஒருமுறை கன்னடத்து காரரிடம் பேசும்போது அவர் சொன்னார் , தண்ணீர் கேட்டீர்கள் கொடுத்தோம், சூப்பர் ஸ்டார் கேட்டீர்கள் கொடுத்தோம் , முதல் அமைச்சரும் கொடுத்தோம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்கிறார். இந்தியாவில் வேறு எங்கும் இதுமாதிரி நடக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X