பொது செய்தி

தமிழ்நாடு

மட்டன், சிக்கன், மீன் வாங்க ஆர்வம் மக்கள் கூட்டம் இன்று அலைமோதும்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநிலம் முழுதும், நாளை எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அதனால், மட்டன், சிக்கன் மற்றும் மீன்கள் வாங்க, மக்கள் கூட்டம் இன்றே அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. வணிக வளாகங்கள் தவிர, அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், கூட்டம் கூடுவதை தடுக்க, இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாநிலம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.கடைகள் எதுவும் திறக்கப்படாது. வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது. இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாளையுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நாளை கடைகள் கிடையாது என்பதால், இன்றே இறைச்சி வாங்கவும், மீன்கள் வாங்கவும், மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை, ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X