பொது செய்தி

தமிழ்நாடு

புதுகை கொரோனா வார்டில் கலெக்டர் அதிரடி ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், கொரோனா நோயாளிகளுக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கொரோனா வார்டில், இரவு நேரத்தில், கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை மற்றும் பழைய அரசு மருத்துவமனையில் உள்ள, கொரோனா நல மையம் ஆகியவற்றில் சிகிச்சை பெறுகின்றனர்.இரு மையங்களிலும், 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், தரமில்லாமல் இருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து, கலெக்டர் உமா மகேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு, இரண்டு மருத்துவ மனைகளிலும், திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவுகளை சாப்பிட்டு, அதன் தரத்தை சோதித்து பார்த்தார்.நிருபர்களிடம், கலெக்டர் கூறியதாவது: உணவின் தரம், நல்ல முறையில் உள்ளது. ஆனால் அதை வழங்க, கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் எனக் கேட்டனர். இதன்படி, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை உட்பட பிற இடங்களில், 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு, பணிகள் நடக்கின்றன.

புதுக்கோட்டையில், தமிழக குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட, 2,000 வீடுகளில், ஒரு வீட்டிற்கு மூன்று பேர் வீதம் தங்க வைத்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X