பொது செய்தி

தமிழ்நாடு

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : சொந்த வாகனங்களை, வாடகை வாகனமாக பயன்படுத்தினால், சிறைபிடிக்கும் படி, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, துணை போக்குவரத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, திருச்சி மண்டல செயலாக்கப் பிரிவு, துணை போக்குவரத்து கமிஷனர் அழகரசு, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சொந்த பயன்பாட்டு வாகனங்கள், வாடகை வாகனங்களாக இயக்கப்படுவதாக, சென்னையில் செயல்படும் சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தில் இருந்து, கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.அதனால், சாலையில் செல்லும் சொந்த வாகனங்களை ஆய்வு செய்து, வாடகை வாகன மாக இயக்கப்படுவது தெரிந்தால், அவற்றை சிறைபிடிக்க வேண்டும்.

துணை போக்குவரத்து கமிஷனரின் நடவடிக்கையை தொடர்ந்து, அனுமதி அளிக்கப்பட்டதும், வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X